தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

தொகுப்பாளராக பணியாற்றியவர் சித்து. பின்னர் யு-டியூப்பில் பொழுதுபோக்கு தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து இன்னும் பிரபலமானார். சில மாதங்களுக்கு முன் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தில் அவரது நண்பராக நடித்தார். சித்து சினிமாவில் நடிக்க போவதாக ஏற்கனவே தகவல் வந்தது. இப்போது இவரின் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தை அவரே இயக்க போகிறார். அவரே நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு டயங்கரம். தாங்கள் படம் பண்ணுவதை, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ வைத்து தங்கள் ஸ்டைலில் ஒரு காமெடி புரோமோவை அவர்கள் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இளவரசு படத்தில் முக்கிய வேடத்தில் இருக்கிறார். மற்ற நடிகர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.




