யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! | மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? |
இந்தியத் திரையுலகத்தில் 'பான் இந்தியா' என்பதைப் பிரபலப்படுத்திய படம் 'பாகுபலி 2'. அதன்பின் சில பல முன்னணி நடிகர்களின் படங்களை ஐந்து மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிட்டு அவற்றைப் 'பான் இந்தியா' படங்கள் என்று அழைத்தார்கள். உலக அளவில் அந்தப் படங்கள் கோடிகளில் வசூலித்தாலும் கூட 'பான் இந்தியா' படம் என்றே சொல்லப்பட்டது. அவற்றை 'பான் வேர்ல்டு' படம் என்று சொல்வதில்லை.
இந்நிலையில் அட்லி இயக்கத்தில், தான் நடிக்க உள்ள படத்தை 'பான் வேர்ல்டு' படமாக உருவாக்க உள்ளதாக 'வேவ்ஸ் 2025' மாநாட்டில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். “ஜவான்' மற்றும் தென்னிந்தியாவில் சில சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் அட்லியுடன் எனது 22வது படத்தில் நடிக்க உள்ளேன். அவர் என்னிடம் சொன்ன ஐடியாக்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருடைய ஆசைகளும் எனக்குப் பிடித்திருந்தது. எங்கள் இருவரது எண்ணங்களும் ஒரே மாதிரியாக உள்ளதாக உணர்ந்தேன். இந்திய சினிமாவிற்கு ஒரு புதிய காட்சி அதிசயத்தைக் கொண்டு வருவோம் என்று நம்புகிறோம். இது இந்திய உணர்வுகளை உள்ளடக்கிய ஒரு சர்வதேச திரைப்படமாக இருக்கும்,” என்று கூறியுள்ளார்.
இப்படத்தின் அடுத்த கட்டப் பயணமாக படத்தில் நடிக்க உள்ள கதாநாயகிகளுக்கான தேர்வும், மற்ற நடிகர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. விரைவில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகலாம்.