2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

இயக்குனர் பாண்டிராஜ், நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'தலைவன் தலைவி' படம் வெற்றி படமாக அமைந்தது. இதனால் மீண்டும் இதே கூட்டணியில் புதிய படம் உருவாகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றனர் என ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால் இந்த படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாம்.
இதற்கிடையில் குறுகிய காலக் கட்டத்தில் 'கதகளி' படத்தை போன்று ஒரு ஆக் ஷன் கதையை படமாக்க திட்டமிட்டுள்ளார் பாண்டிராஜ். இதில் கதாநாயகனாக நடிப்பதற்காக ஹரிஷ் கல்யாண் உடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளனர் என கூறப்படுகிறது.