அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

2025ம் ஆண்டில் தமிழ் சினிமா சில பல புதிய சாதனைகளை படைக்கும். 1000 கோடி வசூல் என்பதை எட்டிப் பார்க்கும் என்றெல்லாம் வருடத்தின் ஆரம்பத்தில் சொன்னார்கள். இந்த வருடம் முடிய இன்னும் இரண்டு மாதங்கள்தான் உள்ளது. கடந்து போகும் 10வது மாதத்தில் இதுவரையில் 210 படங்கள் வெளியாகி உள்ளன.
அவற்றில் வசூல் ரீதியான உண்மையான வெற்றிப் படங்கள் என்று அனைத்து தரப்பிலும் விசாரித்தால் ஐந்துக்கும் குறைவான படங்களையே சொல்கிறார்கள். மொத்தத்தில் அதிக வசூலைக் குவித்த படம் என்று பார்த்தால் 'கூலி' படம் 600 கோடி வசூலைக் கடந்து முதலிடத்தில் உள்ளது.
100 கோடி வசூலைக் கடந்த படங்கள் என்று பார்த்தால், “கூலி, குட் பேட் அக்லி, டிராகன், விடாமுயற்சி, தலைவன் தலைவி, டியூட், மதராஸி' ஆகிய 7 படங்களை மட்டுமே சொல்ல முடியும். தனுஷ் நடித்து வெளிவந்த 'குபேரா' படம் தமிழில் தோல்வியையும் தெலுங்கில் 100 கோடி வசூலையும் கடந்தது.
50 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து லாபம் தந்த படங்களில் 'டூரிஸ்ட் பேமிலி, மாமன்' ஆகிய படங்கள் உள்ளன. சில படங்கள் 10 கோடி வசூலில் கொஞ்சமாக லாபத்தைக் கொடுத்த படங்களாக உள்ளன.
அடுத்த வர உள்ள இரண்டு மாதங்களில் 100 கோடி வசூலைக் குவிக்கும் அளவிற்கான படங்கள் என ஓரிரு படங்கள் மீது எதிர்பார்ப்பு உள்ளது. இந்த வருடத்தில் மற்ற மொழி சினிமாக்களின் வெற்றியோடு ஒப்பிடும் போது தமிழ் சினிமா மிகவும் பின்தங்கிதான் உள்ளது.