2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தமிழ் சினிமாவில் கதாநாயகனின் அப்பா, கதாநாயகியன் அப்பா என்றாலே சில காட்சிகளில் மட்டுமே வந்து போவார்கள். அபூர்வமாக ஒரு சில படங்களில் மட்டுமே அவர்களுக்கு முக்கியத்துவமான காட்சிகள் இருக்கும். ஆனால், தான் இயக்கும் படங்களில் அப்பா கதாபாத்திரத்தை நாயகனுக்கு சமமான ஒரு கதாபாத்திரமாக உருவாக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
அவரது இயக்கத்தில் வந்த 'பரியேறும் பெருமாள்' படத்தில் நாயகன் கதிர் அப்பா கதாபாத்திரத்தில் கூத்துக் கலைஞர் வண்ணாரப்பேட்டை தங்கராஜ், 'கர்ணன்' படத்தில் நாயகன் தனுஷ் அப்பா கதாபாத்திரத்தில் பூ ராமு, 'மாமன்னன்' படத்தில் நாயகன் உதயநிதியின் அப்பா கதாபாத்திரத்தில் வடிவேலு, 'பைசன்' படத்தில் நாயகன் துருவ் விக்ரமின் கதாபாத்திரத்தில் பசுபதி ஆகியோர் நடித்திருந்தார்கள்.
ஒரு படத்தில் நாயகன் பற்றியோ, நாயகி பற்றியோ பேசப்படுவதை விடவும், அந்தப் படத்தில் மற்ற குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களைப் பற்றிய பேச்சு வரும் போது அந்தப் படங்களின் கதாபாத்திர வடிவமைப்பும் பேசப்படுகிறது. அப்படியான ஒரு தாக்கத்தை மாரி செல்வராஜின் அப்பா கதாபாத்திரங்கள் ஏற்படுத்தி இருக்கின்றன.