கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? |

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சில வருடங்களாகவே கதையின் நாயகியாக தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இன்னொரு பக்கம் அவருக்கு தெலுங்கிலும் சில வாய்ப்புகள் தேடி வந்தன. அந்த வகையில் கடந்த வருடம் தெலுங்கில் வெங்கடேஷுக்கு ஜோடியாக சங்கராந்திக்கு வஸ்துனம் மற்றும் தமிழில் தீயவர் குலை நடுங்க ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் அவர் நடித்துள்ள நான்கு படங்கள் சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் தடைப்பட்டு நிற்கின்றன.
இந்த நிலையில் தற்போது தெலுங்கில் உருவாகி வரும் ஓ சுகுமாரி என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படத்தை அறிமுக இயக்குனர் பரத் தர்ஷன் என்பவர் இயக்குகிறார். இந்த படம் பான் இந்திய படமாக வெளியாக இருக்கிறது. இன்று ஐஸ்வர்யா ராஜேஷ் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தில் அவரது கதாபாத்திர போஸ்டர் ஒன்றை ஐந்து மொழிகளுக்கும் சேர்த்து படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் துடிப்பும் துடுக்குமான கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என்பது போஸ்டரை பார்க்கும்போதே தெரிகிறது.




