'ஹிருதயபூர்வம்' முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மாளவிகா மோகனன் | பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை-2 கைவிடப்பட்டதா? | திருப்பதி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பிரபுதேவா! | நடிகை ரகுல் ப்ரீத் சிங் கணவரின் வீட்டில் குடியேறும் ஷாருக்கான்! | 'குட் பேட் அக்லி' படத்தின் மையக்கரு இதுதான்! - ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | சித்தார்த் - கியாரா திருமணத்தால் பல நாட்கள் அழுதேன் ; கிச்சா சுதீப் மகள் புது தகவல் | சல்மான்கான் குடும்பத்தினருடன் 'சிக்கந்தர்' படம் பார்த்த ஏ.ஆர் முருகதாஸ் | 'மிராஜ்' படப்பிடிப்பை நிறைவு செய்தார் ஜீத்து ஜோசப் | மோகன்லால் அறிமுக காட்சியே ரஜினியை மனதில் வைத்து உருவாக்கியதுதான் ; பிரித்விராஜ் | 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வரும் மனிஷா ஜஷ்னானி |
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பொதுமக்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உதவ வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள், நிறுவனங்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலரும் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள்.
கொரோனா சிகிச்சைக்காக மட்டுமே அத்தொகை பயன்படுத்தப்படும் என அறிவித்த முதல்வர் வசூலான தொகை எப்படி பயன்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
தமிழ்த் திரையுலகம் சார்பாக நடிகர் சிவக்குமார் குடும்பம், ரஜினிகாந்த், அஜித், விக்ரம், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, இயக்குனர்கள் வெற்றிமாறன், ஷங்கர், ஏஆர் முருகதாஸ் உள்ளிட்டவர்களும் நிதியுதவி வழங்கினர்.
இன்னும் கமல்ஹாசன், விஜய் உள்ளிட்டவர்கள் எந்த ஒரு நிவாரண உதவியையும் வழங்காமல் இருக்கிறார்கள். அதே போல முன்னணி நடிகைகளும் வழங்கவில்லை. இருந்தாலும் நடிகைகள் நிதி அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் தலா 1 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்கள். நிதி அகர்வால் இந்த வருடம் தான் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரவர் சக்திக்குத் தகுந்தபடி 100 முதல் கோடிகள் வரையில் பலர் வழங்கி வருகிறார்கள். இன்னும் சில முன்னணி நடிகர்களும், நடிகைகளும் எந்த ஒரு தொகையையும் அறிவிக்காதது ஆச்சரியமாக இருக்கிறது என ரசிகர்களே சமூக வலைத்தளங்களில் பகிர்கிறார்கள்.