மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

காக்க முட்டை படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை சில புள்ளிகள் வித்தியாசத்தில் தவறவிட்டவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அடுத்து கனா படத்திற்கு கிடைக்கும் என்றார்கள். அதுவும் கிடைக்கவில்லை. சமீபத்தில் தான் தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கியது. இந்த நிலையில் சென்னையில் நடந்து வந்த 18வது சர்வதேச திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராஜேசுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. க.பெ.ரணசிங்கம் படத்தில் நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இதுகுறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருப்பதாவது: உழைப்பிற்கான அங்கீகாரம் உரிய நேரத்தில் கிடைக்கும் போது அது பெரிய மகிழ்ச்சியைத் தரும். அந்த வகையில் இந்த விருதைப் பெற்றது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. க/பெ ரணசிங்கம் படத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் என் அன்பான நன்றி. மேலும் தமிழக அரசின் கலைமாமணி விருதும் சமீபத்தில் எனக்குக் கிடைத்தது. அதற்கு தமிழக அரசிற்கு நெஞ்சார்ந்த நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன். நல்ல நடிகை என்ற அடையாளத்தை எனக்குள் ஊன்றிய ரசிகர்களுக்கு பேரன்பும் பெரு நன்றியும். என்றார்




