பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! | கமர்ஷியல் படங்களில் உச்சம் தொடுவேன் - திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியன் | மூன்று மாதம் வெயிலில் நின்று கறுப்பானேன் - 'கொட்டுக்காளி' சாய் அபிநயா | நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை : அஜித் நெகிழ்ச்சி | ''எங்களுக்கு 'வாழ்க' சொன்னது போதும்! நீங்க எப்ப வாழப்போறீங்க...?'': துபாயில் அஜித் பேட்டி | என் குணம் இப்படி தான்... ஆசையை சொன்ன அதிதி ஷங்கர் | துருவ நட்சத்திரம் படத்திற்கு யாரும் உதவவில்லை: கவுதம் மேனன் வருத்தம் |
கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை அதே பெயரில் படமாக இயக்கி வருகிறார் மணிரத்னம். சுமார் 500 கோடி ரூபாய் செலவில் இரண்டு பாகமாக இந்த படம் உருவாகி வருகிறது. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், அஸ்வின், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இது சரித்திர படம் என்பதால் சரித்திரகால ஆடைகளை தேர்வு செய்வதும், தயார் செய்வதும் முக்கியமானதாக இருக்கிறது. இதற்காக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஏக் லக்கானி தலைமையில் சுமார் 20 இளம் ஆடை வடிவமைப்பாளர்கள் பணியாற்றுகிறார்கள்.
கொரோனா பிரச்சினைக்கு பிறகு ஐதராபாத் பிலிம்சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து 45 நாட்கள் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நடந்தது. இது இரண்டாவது கட்ட படிப்பிடிப்பு. 3வது கட்ட படப்பிடிப்புகள் ராஜஸ்தானில் நடக்க இருக்கிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இளம் ஆடை வடிவமைப்பாளர்கள் இயக்குனர் மணிரத்னத்துடக் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.
அதனை ஏக் லக்கானி தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டு எழுதியிருப்பதாவது: பணியாற்றும் அணிகளில் ஒரு அணி, இதோ பெரிய தலைவர் மணி அவர்களுடனேயே புகைப்படம். இந்த அசுரத்தனமான படப்பிடிப்பை முழு மனதுடன் முடிக்கிறோம். இந்த கொரோனா காலத்தில் இதை முடித்திருக்கிறோம் என்பதை நம்ப முடியவில்லை. இனி நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். என்று எழுதியிருக்கிறார்.