சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! | பிள்ளையார்சுழி போட்ட பிரேமி: மனம் திறந்த பிரியதர்ஷினி |
பாரம்பரிய சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர்தான், இந்தியாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம். அவரது 67வது பிறந்த தினம் இன்று…
* கோபாலரத்னம் சுப்ரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட மணிரத்னம், 1956ஆம் ஆண்டு ஜுன் 02 அன்று, தமிழ்நாட்டிலுள்ள மதுரை மாநகரில் பிறந்தார்.
* தந்தை கோபால ரத்னம் திரைப்பட விநியோகஸ்தராக இருந்தவர். 'வீனஸ்' கிருஷ்ணமூர்த்தி என்றழைக்கப்படும் இவரது மாமா ஒரு திரைப்பட தயாரிப்பாளர். “வீனஸ் பிக்சர்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வந்தவர்.
* தனது ஆரம்பகால பள்ளிப் படிப்பு மற்றும் கல்லூரி படிப்பை சென்னையிலும், மேலாண்மை முதுகலை பட்டத்தை மும்பையிலும் படித்து முடித்தார் மணிரத்னம்.
* எந்த ஒரு திரைப்பட இயக்குநரிடமும் உதவியாளராக பணிபுரியாமல் நேரடியாக இயக்குநர் அவதாரம் எடுத்தவர் தான் நமது பெருமைக்குரிய மணிரத்னம்.
* 1983ஆம் ஆண்டு ஹிந்தி நடிகர் அனில் கபூர் மற்றும் லட்சுமி நடிப்பில் வெளிவந்த “பல்லவி அனுபல்லவி” என்ற கன்னட திரைப்படம்தான் மணிரத்னத்தை இயக்குநர் மணிரத்னமாக முதன் முதலில் வெள்ளித்திரைக்கு அடையாளப்படுத்தியது.
* பின்னர் 1984ல் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் “உணரு” என்ற திரைப்படத்தை இயக்கிய இவருக்கு, 1985ல் வெளிவந்த “பகல்நிலவு” திரைப்படம்தான் தமிழில் இவரை ஒரு இயக்குநராக அறிமுகப்படுத்தியது.
* பின்னர் கோவை தம்பி தயாரிப்பில் “இதயக்கோயில்” என்னும் திரைப்படத்தை இயக்கிய இவரது ஆரம்பகால திரைப்படங்கள் பெரிதளவில் பேசப்படாமல் இருந்தாலும், 1986ஆம் ஆண்டு இவர் இயக்கிய “மௌனராகம்” திரைப்படம் அனைவரையும் ஈர்த்ததோடு, முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் மணிரத்னத்தையும் இடம்பெறச் செய்தது.
* 1987ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசனோடு இணைந்த இயக்குநர் மணிரத்னம், “நாயகன்” திரைப்படத்தை இயக்கி வெளியிட்டு ஒட்டுமொத்த திரையுலகையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.
* தொடர்ந்து “அக்னிநட்சத்திரம்”, “அஞ்சலி” என இயக்கி வந்த வேளையில், 1991ல் “தளபதி” என்ற திரைப்படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தனது இயக்கத்தில் நடிக்க வைத்தும் அழகு பார்த்தார் மணிரத்னம்.
* “பல்லவி அனுபல்லவி” என்ற தனது முதல் படத்திலிருந்து “தளபதி” திரைப்படம் வரை இசைஞானி இளையராஜாவுடன் பயணித்து வந்த இயக்குநர் மணிரத்னம், 1992ல் இவர் இயக்கிய “ரோஜா” என்ற திரைப்படத்தின் மூலம் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானை இசையமைப்பாளராக அறிமுகம் செய்து பெருமை கண்டார்.
* அன்று ஆரம்பமான இந்த வெற்றி கூட்டணி, தற்போது இவரது இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப் திரைப்படங்களான “பொன்னியின் செல்வன்”, “பொன்னியின் செல்வன் - 2 வரை தொடர்கிறது.
* திரைப்பட இயக்கம் தவிர்த்து “மெட்ராஸ் டாக்கீஸ்” என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் ஆரம்பித்து, பல வெற்றிப் படங்களை தயாரித்ததன் மூலம் தன்னை ஒரு தயாரிப்பாளராகவும் உயர்த்திக் கொண்டார் இயக்குநர் மணிரத்னம்.
* மற்ற இயக்குநர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு காணப்படும் இவரது திரைப்படங்களின் வெற்றிக்கு நேர்த்தியான திரைக்கதையும், தொழில் நுட்பமும், நீண்ட நெடிய வசனங்களின்றி ஒற்றை வார்த்தை வசனங்களும் பெரிதும் உதவியது என்பது அனைவரும் அறிந்ததே.
* “6 தேசிய விருதுகள்”, “பத்மஸ்ரீ விருது”, “தமிழ்நாடு அரசு சினிமா விருதுகள்”, “பிலிம் பேர் விருதுகள்”, “கர்நாடக அரசு சினிமா விருது”, “நந்தி விருது”, “வி சாந்தாராம் விருது” என ஏராளமான விருதுகள் இவரது படைப்பாற்றலுக்கு கிடைத்த கௌரவங்கள்.
* தனது 40 ஆண்டுகால வெள்ளித்திரைப் பயணத்தில் 28 திரைப்படங்கள் வரை இயக்கியிருக்கும் இந்த அற்புத திரைக்கலைஞனின் பிறந்த தினமான இன்று அவரை இந்தியாவின் பெருமை என வாழ்த்தி நாமும் இன்புறுவோம்.