டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை மணிரத்னம் இரண்டு பாகங்களாகத் திரைப்படமாக எடுத்தது அந்நாவலின் வாசர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. அதே சமயம் நாவலில் இருந்த சில கதாபாத்திரங்களை முதல் பாகத் திரைப்படத்தில் துளி கூட பயன்படுத்தாததும் அவர்களை வருத்தமடையச் செய்திருந்தது.
இந்நிலையில் நேற்று வெளியான இரண்டாம் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கல்கி எழுதிய நாவலில் இல்லாத கிளைமாக்சை படத்திற்காக அமைத்திருக்கிறார். அதுவும் சோழர்களின் பெருமையைக் குலைப்பது போன்ற ஒரு காட்சியாக அமைந்துள்ளது என பலரும் வருத்தமடைந்துள்ளார்கள்.

கல்கி எழுதிய நாவலின்படி அருள்மொழி வர்மன் அரசராகப் பதவியேற்பதைத் தவிர்த்து, சேந்தன் அமுதனை அரசனாக முடிசூடுவார். அந்த சேந்தன் அமுதன் தான் உத்தம சோழன் என சுந்தர சோழருக்கு அடுத்து அரியணை ஏறி சோழ தேசத்தை ஆட்சி புரிகிறார். உத்தம சோழன் என அழைக்கப்பட்ட இவர் 15 ஆண்டுகள் சோழ தேசத்தை ஆட்சி செய்த பிறகே அருண்மொழி வர்மன் அரியணை ஏறினார். அதன்பிறகு ராஜராஜ சோழன் என மாபெரும் சரித்திரத்தைப் படைத்தார் அருண்மொழி.
ஆனால், 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் செம்பியன் மாதேவியின் வளர்ப்பு மகனான மதுராந்தகனுக்கு அருள்மொழி வர்மன் முடிசூட்டுகிறார். மதுராந்தகன் பாண்டிய மன்னனுக்குப் பிறந்தவர். நந்தினியின் சகோதரர். இப்படியிருக்க படத்தில் சேந்தன் அமுதனுக்கு முடிசூடாமல், மதுராந்தகனுக்கு முடி சூட்டி மணிரத்னம் வரலாற்றை மாற்றியது ஏன் எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
வரலாற்றுப் படத்தில் இப்படி வரலாற்றை மாற்றலாமா? என அவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.