சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

தெலுங்கு நடிகரான சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகன் வருண் தேஜ். அவரும் தெலுங்குத் திரையுலகத்தின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவருக்கும் நடிகை லாவண்யா திரிபாதிக்கும் காதல் என கடந்த சில மாதங்களாகவே கிசுகிசு பரவியது. அதை காதல் ஜோடி தற்போது உறுதியாக்கியுள்ளது.
ஜுன் 9ம் தேதி அவர்களது திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை இருவரது குடும்பத்தினரும் செய்து வருகிறார்களாம். அதற்கான அழைப்பிதழ்கள் நெருங்கிய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. சிரஞ்சீவியின் குடும்பமே நட்சத்திரக் குடும்பம்தான். சிரஞ்சீவி, அவரது மகன் ராம் சரண், சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண், சிரஞ்சீவியின் மைத்துனர் மகன் அல்லு அர்ஜுன் உள்ளிட்டவர்கள் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள உள்ளார்களாம்.
லாவண்யா திரிபாதி தமிழில் “பிரம்மன், மாயவன்' ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தெலுங்கில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.




