இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தெலுங்குத் திரையுலகத்தின் மெகா குடும்பம் என அழைக்கப்படும் சிரஞ்சீவி குடும்பத்தில் அவரது தம்பி நாகபாபுவின் மகன் வருண் தேஜ், நடிகை லாவண்யா திரிபாதி இருவருக்கும் நேற்று ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 'மிஸ்டர்' தெலுங்குப் படத்தில் இருவரும் இணைந்து நடிக்க ஆரம்பித்த 2016ம் ஆண்டிலிருந்து காதலித்து வந்ததாகத் தெரிகிறது.
கடந்த சில வாரங்களாகவே கிசுகிசுவாக பரவிய இவர்களது காதல், நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளிவந்தது. உத்தரப்பிரதேசம் அயோத்யாவைச் சேர்ந்த லாவண்யா மும்பையில் படித்து வளர்ந்தவர். 'அந்தாள ராட்சசி' என்ற தெலுங்குப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் 'பிரம்மன், மாயவன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அடுத்த ஆறு மாதங்களில் இவர்களது திருமணம் நடக்குமா அல்லது அடுத்த வருடத் துவக்கத்தில் நடக்குமா என்பது தெரியவில்லை. ஆனாலும், 'டெஸ்டினேஷன் வெட்டிங்' செய்ய காதல் ஜோடி முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதன்படி இத்தாலி நாட்டில் உள்ள ரிசார்ட் அல்லது ஹோட்டலில் திருமணத்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான இடங்களைத் தேடி வருகிறார்களாம். திருமணத்திற்குப் பிறகு லாவண்யா திரைப்படங்களில் நடிக்கக் கூடாது என வருண் குடும்பத்தினர் கண்டிப்புடன் கூறியதாகவும் டோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கிறார்கள். அதற்கு லாவண்யா சம்மதித்த பிறகுதான் திருமண நிச்சயத்தையும் நடத்தினார்கள் என்கிறார்கள்.