'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். 80களில் அவரது இயக்கத்தில் வர ஆரம்பித்த படங்கள் புதிய அலையை உருவாக்கின. அந்த அலையில் சிக்கிய பலர் இப்போது இயக்குனர்களாக இருக்கிறார்கள். தமிழில் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் அவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உண்டு.
மணிரத்னம் படங்கள் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. தெலுங்கில் அவர் நேரடியாக 'கீதாஞ்சலி' படம் அங்கும் வெற்றி பெற்று தமிழிலும் 'இதயத்தைத் திருடாதே' என டப்பிங் ஆகி இங்கும் பெரிய வெற்றியைப் பெற்றது. அவர் இயக்கிய ஒரே தெலுங்குப் படம் அதுதான்.
ஆனாலும், இன்றைய தெலுங்கு இயக்குனர்களையும் அவர் கவர்ந்துள்ளார் என்பது கூடுதல் தகவல். ஷிவ நிர்வானா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் 'குஷி' படத்தின் முதல் சிங்கிள் பாடல் நேற்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. அப்பாடலில் மணிரத்னம் இயக்கத்தில் வந்த படங்களின் பெயர்களைப் பாடலில் சேர்த்திருக்கிறார்கள்.
'நா ரோஜா நுவ்வே' என்ற அப்பாடலில், “தில் சே, அஞ்சலி, கீதாஞ்சலி, கடலி, மௌன ராகம், அம்ருதா, கர்ஷனா, சகி, தளபதி, செலியா, நாயகடு, ஓகே பங்காரம்,” மணிரத்னம் படப் பெயர்களை வைத்தே பாடலை இயக்குனர் சிவ நிர்வானாவே எழுதியிருக்கிறார்.
ஹெஷம் அப்துல் வகாப் இசையமைத்து, அவரே பாடலையும் பாடியுள்ளார். 24 மணி நேரத்தில் இப்பாடல் 50 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. இயக்குனர் மணிரத்னம் மீது எந்த அளவிற்கு இயக்குனர் சிவ நிர்வானா அபிமானமாக உள்ளார் என்பதை இப்பாடல் காட்டுகிறது.