கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. அவரும் தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொன்டாவும் காதலிப்பதாக கடந்த சில வருடங்களாகவே ஒரு கிசுகிசு இருக்கிறது. இந்நிலையில் மற்றொரு தெலுங்கு நடிகரான பெல்லம்கொன்டா சீனிவாஸை ராஷ்மிகா காதலிப்பதாகச் செய்திகள் வர ஆரம்பித்தன.
ஆனால், அது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் சீனிவாஸ் அது ஆதாரமற்றது. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்,” என்று கூறியுள்ளார். விஜய் தேவரகொன்டா நேற்று அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். திரையுலகத்தைச் சார்ந்த பலரும் ரசிகர்களும் அவருக்க வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். அதே சமயம் ராஷ்மிகா எந்த ஒரு வாழ்த்தையும் தெரிவிக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களிலும் வெளியிடுவார்கள். ராஷ்மிகா அப்படி செய்யாதது சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.