பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
கடந்த சில வருடங்களாகவே சமந்தாவுக்கு உடல் ரீதியாவும், தொழில் ரீதியாகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. புஷ்பா படத்தில் அவர் ஆடிய பாடலும், தி பேமிலி மேன் வெப் தொடரும் தான் அவரை கொஞ்சம் காப்பாற்றியது. கடந்த ஆண்டு வெளியான யசோதாவும், இந்த ஆண்டு கடந்த மாதம் வெளியான சாகுந்தலமும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. அதுவும் சாகுந்தலம் பெரிய தோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில்தான் சமந்தா நடித்துள்ள 'குஷி' படம் வருகிற செப்டம்பர் 1ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்தில் அவர் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் தெலுங்கு தவிர தமிழிலும் வெளிவருகிறது. சமீபத்தில் இந்த படத்திற்காக மதன் கார்க்கி எழுதிய 'என் ரோஜா நீயே...' என்கிற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சிவா நிர்வணா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தாவுடன், ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, ரோகிணி, வெண்ணலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹேப் இசையமைத்திருக்கிறார். சமந்தாவின் தொடர் தோல்விகளை 'குஷி' சரிசெய்யுமா என்பது படம் வெளிவந்த பிறகு தெரியும்.