லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த 'மாஸ்டர்' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த மாதம் 13ம் தேதி வெளியானது.
படம் வெளியான நாளிலிருந்து ரசிகர்களின் வரவேற்புடன் நல்ல வசூலை ஈட்டியது. அப்போது 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி. அந்த சிக்கலிலும் அரங்குகள் நிறைந்து வசூலும் குவிந்ததாக தியேட்டர்காரர்கள் தெரிவித்தார்கள்.
இருப்பினும் கடந்த மாதம் 29ம் தேதி படத்தை ஓடிடி தளத்திலும் வெளியிட்டார்கள். அதில் வெளியான பின் தியேட்டர்களுக்கு அப்படத்தைப் பார்க்க மக்கள் வரமாட்டார்கள் என்றார்கள். ஆனால், அதையும் மீறி கடந்த ஒரு மாத காலமாக தியேட்டர்களுக்கு மக்கள் வந்து ஆச்சரியப்படுத்தி உள்ளார்கள்.
படம் வெளியாகி 45 நாட்களைக் கடந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் 50வது நாளைத் தொட உள்ளது. நாளை கூட சில தியேட்டர்களில் மாலை காட்சிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.
ஓடிடி தளத்தில் மட்டும் படம் வெளியாகாமல் இருந்திருந்தால் இன்னும் அதிகமான வசூலைப் பெற்றிருக்கலாம் என்பது தியேட்டர்காரர்களின் எண்ணமாக உள்ளது.