ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

கோவாவில் நடக்கும் போதை மருந்து கடத்தல், தாதா சண்டை பின்னணியில் யஷ் நடிக்கும் ‛டாக்ஸிக்' படம் உருவாகி வருகிறது. தமிழில் மாதவன் ஜோடியாக ‛நளதமயந்தி' படத்தில் ஹீரோயினாக நடித்த கீதுமோகன்தாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்துக்காக 45 நாட்கள் நடக்கும் ஆக்ஷன் மாரத்தான் ஷூட்டிற்கு 'ஜான் விக்' புகழ் ஜேஜே பெர்ரி பணியாற்றுகிறார். இவர் ‛ஜான்விக், டே ஷிப்ட், பாஸ்ட் ஆண்ட் பியூரியஸ்' உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றியவர்.
மும்பையில் இவர் தலைமையில் இந்த ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. படத்துக்கு மிக முக்கியமான சண்டைக்காட்சிகள் என்பதால் ஸ்டோரி போர்டுகள், துல்லியமான பயிற்சிகள், கலை தொடர்பான விவாதங்கள் போன்றவற்றின் மூலம் மிக நுணுக்கமாக சண்டைகாட்சிகளை உருவாக்கப்போகிறார்களாம்.
''என் 35 ஆண்டு அனுபவத்தில், நான் 39 நாடுகளில் வேலை செய்திருக்கிறேன். நான் இந்திய சினிமாவின் ரசிகன். இந்திய சினிமா படைப்பாற்றலானது, கலைநயம் நிறைந்தது, துணிச்சலானது. யஷ், கீத்து அவர்களின் அற்புதமான குழுவுடன் இணைவது என் வாழ்க்கையின் சிறப்பான தருணம்'' என்று பெர்ரி கூறியுள்ளார்.
இந்த படம் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் எடுக்கப்படுகிறது. இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறது. 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது




