சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா | அக்ஷய் குமாரின் ஹிந்தி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் |
பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் 2016ல் வெளியான படம் ஒப்பம். படம் முழுவதும் பார்வையற்ற மாற்றுத் திறனாளியாக மோகன்லால் நடித்திருந்தாலும், இது ஒரு ஆக்ஷன் படமாக உருவாகி இருந்தது. சமுத்திரக்கனி வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தை ஹைவான் என்கிற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்து இயக்கி வருகிறார் பிரியதர்ஷன். இதில் கதாநாயகனாக அக்ஷய் குமார் நடிக்க, சமுத்திரக்கனி நடித்த வில்லன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது எர்ணாகுளத்தில் நடைபெறுகிறது.
இந்த படம் குறித்து இயக்குனர் பிரியதர்ஷன் கூறும்போது, “இந்தப்படம் ஒப்பம் படத்தை போல அப்படியே இருக்காது. ஹிந்திக்கு ஏற்றார் போல சில மாறுதல்களை செய்துள்ளேன். அதேசமயம் இதில் மோகன்லால் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். அது ரசிகர்களுக்கு ஆச்சரியம் தருவதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியான கண்ணப்பா திரைப்படத்திலும் அக்ஷய் குமார், மோகன்லால் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.