இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

சினிமாவின் ஆரம்ப காலத்தில் ஒரு படம் 50 முதல் 60 தியேட்டர்களில்தான் வெளியாகும், மாவட்ட தலைநகரங்கள், பெரிய நகரங்களில் மட்டுமே வெளிவரும். இந்த நிலையில் முதன் முதலாக 100 தியேட்டர்களில் வெளியான படம் 'உலகம்'.
எல்.எஸ்.ராமசந்திரன் இயக்கிய இந்தப் படத்தில் சித்தூர் வி. நாகையா, எம்.வி.ராஜம்மா, டி.இ.வரதன், பி.கே.சரஸ்வதி, பி.எஸ்.வீரப்பா, டி.கே.பகவதி, எம்.எஸ்.திரவுபதி, டி.ஆர்.ரஜனி, எஸ்.எம்.குமரேசன், 'புலிமூட்டை' ராமசாமி, சதன், ஈ.ஆர்.சுவாமி, எம். டி.கே.சம்பங்கி, குஞ்சிதபாதம் பிள்ளை, வி.டி.கல்யாணம், டி.வி.சேதுராமன், 'அப்பா' கே. துரைசாமி, எம். லட்சுமிபிரபா, சி. கே. சரஸ்வதி, கே. எஸ். அங்கமுத்து, கே. அரங்கநாயகி, என். ஆர். சகுந்தலா, ஜி. சரோஜா, 'பேபி' லட்சுமி குமாரி, கமலா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தது.
ஒரு ஏழை மனிதனும் அவனது மனைவியும் திடீர் பணக்காரர்களாக மாறுவதால் ஏற்படும் பிரச்னைகளை பேசிய படம். லலிதா, பத்மினியின் நடனங்கள், தாராசிங்கின் குத்துச் சண்டை காட்சிகள் அப்போது சென்னையில் நடந்த சில முக்கிய நிகழ்ச்சிகளையும் இந்த படத்தோடு இணைத்து வெளியிட்டார்கள்.
படத்தை 100 தியேட்டர்களில் வெளியிட்டதோடு படத்தை சிறப்பாக விமர்சனம் செய்பவர்களுக்கு ஒரு லட்சம் வரை பரிசும் வழங்கினார்கள். நட்சத்திர நடிகர்கள், கவர்ச்சிகரமான பரிசுகள் மற்றும் பல இருந்தபோதிலும், படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தின் பிரதியும் இப்போது இல்லை.