'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
ஸ்ரீதர் இயக்கிய படம் 'குளிர்கால மேகங்கள்'. அர்ஜுன், சாதனா, காஞ்சனா, வனிதா, ஜெய்சங்கர், தேங்காய் சீனிவாசன், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சங்கர் கணேஷ் இசை அமைத்திருந்தார். பாஸ்கரராவ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
கதைப்படி நாயகன் அர்ஜூன் ஒரு குதிரை பந்தய வீரன். பல போட்டிகளில் வென்று பரிசுகள் பெற்றவன். இதற்காக குதிரைபோட்டி படமாக்கப்பட வேண்டியது இருந்தது. அப்போது குதிரை பந்தயத்தை அரசு தடை செய்திருந்தது. இதனால் அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று நிஜமான குதிரை பந்தயத்தை நடத்தி அதில் அர்ஜுன் நிஜமான குதிரை பந்தய வீரர்களுடன் தானும் குதிரை ஓட்டி காட்சிகள் படமானது.
பார்வையாளர்களும் இலவசமாக காட்சிக்கு அனுமதிக்கப்பட்டு படமானது. 3 நாட்கள் வரை இந்த படப்பிடிப்பு நடந்தது. அப்போது இது பேசு பொருளாக இருந்தது. ஆனாலும் படம் வெற்றி பெறவில்லை.