திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் |
மலையாள திரையுலகில் மோகன்லாலின் 45 வருட கலைச்சேவை மற்றும் அவரது வாழ்நாள் சாதனை ஆகியவற்றை கவுரவிக்கும் விதமாக சமீபத்தில் மத்திய அரசு அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்தது. இந்த விருதை பெற்ற மோகன்லாலை தனது பங்கிற்கு கேரள மாநில அரசும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரம்மாண்ட விழா எடுத்து பாராட்டியது.
இந்த நிகழ்வில் மூத்த எழுத்தாளரும் இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசும்போது, “20 வருடங்களுக்கு முன்பு நான் இப்படி தாதா சாகேப் பால்கே விருது வாங்கியபோது யாரும் எனக்கு விழா எடுத்து கவுரவிக்கவில்லை. முதல்வர் பினராயி விஜயன் தனி கவனம் எடுத்து மோகன்லாலுக்கு இந்த விழாவை நடத்துகிறார்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் “இத்தனை வருடங்களில் மோகன்லால் என்னுடைய ஒரு படத்தில் கூட நடித்தது இல்லை. காரணம் மோகன்லால் எனது கதைகளுக்கு பொருந்தமாட்டார்” என்றும் கூறினார். இவரது இந்த பேச்சு சோசியல் மீடியாவில் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. இந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகரான பைஜூ சந்தோஷ் இது குறித்து கூறும்போது, “அடூர் கோபாலகிருஷ்ணன் டைரக்ஷனில் மோகன்லால் நடிக்காததால் தான் அவர் இந்த சூப்பர் ஸ்டார் என்கிற நிலைக்கு வர முடிந்தது” என்று கிண்டலாக தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.