அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கே.ஜி.எப் பட புகழ் யஷ் அவரது 19வது படமாக 'டாக்சிக்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கின்றனர். யஷ் அக்கா கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா மற்றும் கதாநாயகியாக கியாரா அத்வானி, ஹூமா குரேஷி நடித்து வருகின்றனர்.
இப்படத்தை கன்னடம் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் படமாக்கி வருகின்றனர். இப்படம் 2026ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் பலகட்ட படப்பிடிப்பு இதுவரை நிறைவு பெற்றுள்ள நிலையில் தற்போது இதில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ருக்மணி வசந்த் இணைந்துள்ளார். இவர் சம்மந்தப்பட்ட படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் துவங்கும் என்கிறார்கள். ருக்மணி வசந்த் காந்தாரா சாப்டர் 1, ஜூனியர் என்டிஆர் படம் மற்றும் டாக்சிக் என தொடர்ந்து பான் இந்திய படங்களில் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.