ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
மோகித் சூரி இயக்கத்தில் அறிமுக நட்சத்திரங்கள் அஹான் பான்டே, அனீத் பட்டா மற்றும் பலர் நடிப்பில் கடந்த ஜுலை மாதம் 18ம் தேதி வெளியான படம் 'சாயரா'. இப்படம் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
உலக அளவில் மொத்தமாக 550 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்திய அளவில் தற்போது 400 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 40 கோடி செலவில் தயாரான படம் இந்த அளவிற்கு வசூலித்து பெரும் வரவேற்பைப் பெற்று ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இந்த 2025ம் ஆண்டில் அதிக வசூலைக் குவித்த இந்தியப் படங்களில் இந்தப் படம் இரண்டாம் இடத்தில் உள்ளது. 800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து 'ச்சாவா' ஹிந்திப் படம் முதலிடத்தில் உள்ளது.