சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு |

கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கிய நிறுவன தலைவர்களின் ஒருவர் பி.கிருஷ்ணபிள்ளை. அங்கே பல்வேறு போராட்டங்களை நடத்தியவர், 1948ம் ஆண்டு தனது 42வது வயதில் அவர் பாம்பு கடித்து காலமானார். இவரின் வாழ்க்கை ‛வீரவணக்கம்' என்ற பெயரில் சினிமாவாகி உள்ளது. இதில் பி.கிருஷ்ணபிள்ளையாக சமுத்திரக்கனி நடித்துள்ளார். 1940களில் கேரளாவில் இருந்த பாகுபாடுகள், கொடுமைகள், கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்த விதம் இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது. அனில் நாகேந்திரன் இயக்கி உள்ளார்.
இந்த பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஏனோ சமுத்திரக்கனி கலந்துகொள்ளவில்லை. இது குறித்த இயக்குனரிடம் கேட்டபோது அவர் தெலுங்கில் மற்ற படங்களில் பிஸி என சமாளித்தார். அதேபோல் முக்கியமான கேரக்டரில் நடித்த ‛பாய்ஸ்' பரத்தும் படம் குறித்து பேசவில்லை. ஆனால், பி.கிருஷ்ணபிள்ளை காலத்தில் வாழ்ந்த, கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் பாடகியான பி.கே.மேதினி இந்த பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார்.
இந்த வீரவணக்கம் படத்தில் பி.கிருஷ்ணபிள்ளை குறித்த கதைகளை சொல்லும் முக்கியமான கேரக்டரில் நடித்து, கேரளாவில் புகழ்பெற்ற கட்சி பாடல்களையும் படத்தில் பாடியிருக்கிறார். 97 வயதான பி.கே.மேதினி படம் குறித்து பேசுகையில் சமுத்திரக்கனி, பரத் ஒரு தலைவர் படத்தை புறக்கணிக்கலாமா என்று கேள்வி எழுந்துள்ளது.