நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கடந்த 2011ம் ஆண்டில் தமிழில் க்ரிஷ் இயக்கத்தில் சிலம்பரசன், அனுஷ்கா, பரத் ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் 'வானம்'. இந்த படம் தெலுங்கில் வெளியான 'வேதம்' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. வேதம் படம், வானம் படமாக தமிழில் உருவானது எப்படி என்று இயக்குனர் க்ரிஷ் தற்போது அளித்த பேட்டியில் கூறியதாவது, "வேதம் திரைப்படம் அந்த காலகட்டத்தில் தெலுங்கில் வெளியான ஒரு அந்தாலஜி படம். அந்தப் படத்தை பார்த்த பிறகு சிலம்பரசன் எனக்கு போன் செய்து, தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்யலாம் என்று கேட்டார். அதன் பிறகு தான் 'வானம்' படம் உருவானது. விடிவி கணேஷ் சார் தயாரித்தார். சிம்பு சார் அருமையாக நடிக்கக்கூடியவர். அவருடன் அன்றைக்கு நட்பு ஏற்பட்டது. இப்போது நண்பர்களாக இருக்கிறோம். என்னுடைய எல்லா படங்களையும் பார்த்து எனக்கு பாராட்டி மெசேஜ் செய்வார்." என தெரிவித்துள்ளார்.