ஜூலையில் 1400 கோடி வசூல் கடந்த இந்திய சினிமா | மோதிரக் கையால் குட்டுப்பட்டு கதாநாயகியாக அறிமுகமாகும் மகேஷ்பாபுவின் சகோதரர் மகள் | ‛தி ராஜா சாப்' பட சம்பள பாக்கி விவகாரம் ; தயாரிப்பாளர் விளக்கம் | தொடர்ந்து ஆர்வத்தை தூண்டும் மம்முட்டியின் ‛கலம்காவல்' பட போஸ்டர்கள் | டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? |
உலக அளவில் அதிகமான வசூலைப் பெற்றுத் தரும் திரையுலகத்தில் இந்தியத் திரையுலகமும் ஒன்று. இந்த 2025ம் வருடத்தில் இதுவரையில் வெளிவந்த திரைப்படங்களில் அதிக வசூலைக் குவித்த படங்கள் மூலம் மட்டும் சுமார் 4000 கோடி வரை வசூலித்துள்ளது. மற்ற படங்களின் வசூலையும் சேர்த்தால் சுமார் 7000 கோடியைக் கடந்துள்ளது.
அதில் கடந்த மாதம் வெளியான படங்கள் மூலம் மட்டும் சுமார் 1400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. கடந்த மாதம் வெளியான ஹிந்திப் படமான 'சாயரா', அனிமேஷன் படமான 'மகாஅவதார் நரசிம்மா', தெலுங்குப் படமான 'ஹரிஹர வீரமல்லு', தமிழ்ப் படமான 'தலைவன் தலைவி', கன்னடப் படமான 'சு பிரம் சோ' ஆகிய படங்கள் இதில் குறிப்பிடப்பட வேண்டியவை.
அவற்றோடு ஹாலிவுட் படங்களான 'ஜூராசிக் வேர்ல்டு ரிபர்த், சூப்பர்மேன், தி பன்டாஸ்டிக் போர் - தி பர்ஸ்ட் ஸ்டெப்ஸ், எப் 1 ஆகிய படங்களும் இந்தியாவில் நல்ல வசூலைக் கொடுத்துள்ளன.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் கடந்த ஜுலை மாதத்தில் வெளியான 24 படங்களில் 'தலைவன் தலைவி' படம் மட்டும் 80 கோடி வசூலைக் கடந்து வெற்றிப் படமாக அமைந்தது. '3 பிஎச்கே, பறந்து போ, மாரீசன்' ஆகிய படங்கள் ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றாலும் குறைந்த அளவிலான வசூலை மட்டுமே கொடுத்தன.