பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜனநாயகன்'. அடுத்த வாரம் ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரைலர் இன்று ஜனவரி 3, மாலை 6:45 மணிக்கு வெளியாக உள்ளது.
இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, சினிமாவைத் துறந்து அரசியல் பக்கம் நிரந்தரமாகப் போக உள்ளார் விஜய். 'ஜனநாயகன்' படம்தான் அவருடைய கடைசி திரைப்படம். அதனால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
இன்று மாலை வெளியாக உள்ள டிரைலர் இப்படத்தின் பல கேள்விகளுக்கு விடையளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் ''இது பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்கா ?” என்ற கேள்விதான் பலரது மனதிலும் எழுந்துள்ள ஒன்று.
டிரைலர் வெளியானதுமே, 'பகவந்த் கேசரி' படத்தின் காட்சிகளுடன் இப்படத்தின் டிரைலரை ஒப்பிட்டுப் பேசுவது ஆரம்பமாக வாய்ப்புள்ளது. பாலகிருஷ்ணா நடிப்பில் வந்த தெலுங்குப் படமான 'பகவந்த் கேசரி' படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம். அந்த ஹீரோயிசம் விஜய்க்கும் பொருத்தமாகவே இருக்கும். ஆனாலும், அப்படியே ரீமேக் செய்திருப்பார்களா இல்லை நிறைய மாற்றியிருப்பார்களா என்பதும் தெரியவில்லை.
அனைத்திற்குமான பதில் இன்று மாலை 6.45 மணிக்குக் கிடைத்துவிடும்.