கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? | வா வாத்தியாருக்கு யு/ஏ சான்றிதழ்: ஆனாலும் பதைபதைப்பில் படக்குழு |

ஹிந்தியில் மோகித் சூரி இயக்கத்தில் கடந்த ஜூலை 18ம் தேதி திரைக்கு வந்த படம் ‛சாயாரா'. அஹான் பாண்டே, அனிட் பட்டா நடிப்பில் உருவான இந்த படத்தை யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படம் 50 நாட்களை கடந்து தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், 50 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் இதுவரை 576 கோடி வசூலித்துள்ளது. இந்த ஆண்டில் வெளியான காதல் படங்களில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது.
இந்நிலையில் இந்த சாயாரா படத்தை வருகிற செப்டம்பர் 12ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். குறிப்பாக ஆங்கில வசனங்களுடன் ஹிந்தியில் இப்படம் வெளியாகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.