‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

சென்னையில் கடந்த வாரம் நடந்த ஒரு நிகழ்ச்சியில், நடிகர் விஜய் அரசியலில் ஜெயிக்கமாட்டார். அவர் கண்டிப்பாக நவம்பர் மாதம் மீண்டும் நடிக்க வருவார். நான் 2 ஆண்டுகளில் அவரை வைத்து படம் தயாரிப்பேன். எனக்கு ஜோசியம் தெரியும் என்று பேசினார் அனலி படத்தின் ஹீரோயின் சிந்தியா. அந்த பேச்சு வைரல் ஆனது. விஜய் ரசிகர்கள், த வெ க ஆதரவாளர்கள் அமெரிக்கா வாழ் சிந்தியாவை திட்டினர். தனது அனலி படம் பிரபலம் ஆக, அப்படி அவர் பேசியதாக கேள்வி. படத்தின் தயாரிப்பாளரும் அவரே என்பதால் படத்தை விளம்பரப்படுத்த இப்படி பேசினார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அனலி படம் நேற்று வெளியானது. சென்னையில் சில தியேட்டரில் மட்டுமே வெளியான நிலையில், முதற்காட்சிக்கு கூட்டம் இல்லை. ஒரு பிரபல தியேட்டருக்கு சென்று அனலி பட நிலவரத்தை பார்வையிட்ட சிந்தியா உண்மை நிலையை அறிந்து அதிர்ந்து போனார். படக்குழுவினரிடம் கொஞ்சம் ஆவேசமாக பேசியபடி, கண் கலங்கி தியேட்டரை விட்டு வெளியேறினார். கஷ்டப்பட்டு சம்பாதித்த சிந்தியா இதற்கு முன்பு வர்ணாசிரமம், தினசரி படங்களை தயாரித்தார். அதிலும் அவருக்கு பெரிய நஷ்டம். அதை விட பெரிய பட்ஜெட்டில் அனலி படத்தை தயாரித்து, வழக்கம்போல் அவரே ஹீரோயினாக நடித்தார். படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. இதிலும் சில கோடி நஷ்டம் என தகவல். அடுத்தும் சிந்தியா படம் தயாரிப்பாரா? அவரே நடிப்பாரா என்பது இப்போதைய கேள்வி.