‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், நடிகர் ரஜினிகாந்திற்கும் இடையே உள்ள நெருக்கமான நட்பு ரசிகர்கள் அறிந்ததுதான். தற்போது ரஜினியின் படங்களுக்கு இளையராஜா இசையமைப்பதில்லை என்றாலும் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொள்வார்கள். இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு ரஜினிகாந்த் அடிக்கடி போவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அப்படி அவர்கள் இருவரும் நேற்று சந்தித்துக் கொண்ட போது வெளிநாட்டுப் பெண் தயாரிப்பாளரான சிந்தியா லூர்து அவர்களை சந்தித்ததைப் பற்றி அவரது இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“இன்று ராஜா சாரின் அலுவலகத்தில் சூப்பர்ஸ்டாரை சந்தித்தேன். என்னுடன் ஒரே புகைப்படத்தில் இரண்டு ஜாம்பவான்கள். இதைவிட வேறு என்ன கேட்கப் போகிறேன். குறிப்பாக அவர்களுக்கு இடையே நடந்த அழகான சண்டையை ரசித்தேன். ரஜினி சாருக்கு மரியாதை தரும் விதமாக அவரை நடுவில் நிற்க வேண்டுமென ராஜா சார் கேட்டுக் கொண்டார். ஆனால், ராஜா சாருக்கு மரியாதை தரும் விதமாக என்னை நடுவில் நிற்க வேண்டுமென ரஜினி சார் கேட்டுக் கொண்டார். நாங்கள் மூவரும் அவரவர் எங்கு நிற்க வேண்டுமென முடிவெடுக்கும் வரை அந்த சண்டை சில வினாடிகளுக்கு நீடித்தது. சூப்பர் ஸ்டாரின் ஆசீர்வாதமும் கிடைத்தது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த தயாரிப்பாளர், பாடகி, நடிகையான சிந்தியா லூர்து தயாரித்து நடிக்கும் 'தினசரி' என்ற படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.




