ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

டூரிஸ்ட் பேமிலி பட இயக்குனர் அபிஷன் ஜீவ்னித் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை அவரின் உதவி இயக்குநர் மதன் என்பவர் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்கின்றார். இந்த படத்தை நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா அவரின் ஜியான் பிலிம்ஸ் மற்றும் டூரிஸ்ட் பேமிலி படத்தின் இணை தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலன் உடன் இணைந்து தயாரித்துள்ளனர். இதற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு தலைப்பு வைக்காமலே படத்தின் படப்பிடிப்பு எல்லாம் நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு 'வித் லவ் ' என தலைப்பு வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். படத்தின் முதல் பார்வை மற்றும் டைட்டில் அறிமுக வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு மகள் சவுந்தர்யா மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.




