இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
மோகித் சூரி இயக்கத்தில், அகான் பாண்டே, அனீத் பட்டா மற்றும் பலர் நடிப்பில் உருவான 'சாயரா' ஹிந்திப் படம் கடந்த ஜூலை 18ம் தேதி வெளியானது. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது 581 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரையில் வெளிவந்த காதல் படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். உலக அளவில் 581 கோடி வசூல் என்பதில் இந்தியாவில் மட்டும் 412 கோடி, வெளிநாடுகளில் 169 கோடி.
இந்த வருடத்தில் வெளிவந்த படங்களில் 'சாவா' ஹிந்திப் படம் 800 கோடி வசூலைக் குவித்து முதலிடத்தில் உள்ளது. அடுத்து 581 கோடியுடன் இப்படம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்ப் படமான 'கூலி' படம் 525 கோடியைக் கடந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்ட 'சாயரா' படத்தை வெறும் 40 கோடியில் தயாரித்தது யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம். அது இதுவரையில் சூலித்துள்ளது 581 கோடி. அதே நிறுவனம் முன்னணி நடிகர்களான ஹிருத்திக் ரோஷன், ஜுனியர் என்டிஆர், கியாரா அத்வானி ஆகியோர் நடிக்க, 300 கோடிக்கும் அதிகமான செலவில் தயாரித்த 'வார் 2' 350 கோடியை மட்டுமே கடந்து நஷ்டத்தைப் பெற வைத்துள்ளது.