படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி | ரஜினி மாமனாராக நடிக்க வேண்டியது : திண்டுக்கல் லியோனி சொன்ன புது தகவல் |

ரஜினி நடித்து வெளியான ‛படையப்பா' படம் டிச., 12ல் அவரது பிறந்தநாளில் ரீ-ரிலீஸாகிறது. ‛‛படையப்பா பார்ட் 2-வை எடுக்க போகிறோம். அதற்கான பேச்சுவார்த்தை போய்க்கொண்டு இருக்கிறது'' என ரஜினிகாந்த் பேட்டி கொடுத்துள்ளார்.
படையப்பா ரீ ரிலீசால் ரம்யா கிருஷ்ணனும் மகிழ்ச்சியில் இருக்கிறாராம். சில மாதங்களுக்கு முன்பு அவர் நடித்த கேப்டன் பிரபாகரன் ரீ ரிலீஸ் ஆகி, ஓரளவு வெற்றி பெற்றது. இப்போது படையப்பாவும் வருகிறது. இந்த படம் வந்தால் இன்றைய தலைமுறையினர் மத்தியில் தன் பெயர், நடிப்பு பிரபலம் ஆகும் என நினைக்கிறாராம்.
அடுத்ததாக கமலுடன் தான் நடித்த பஞ்சதந்திரமும் ரீ ரிலீஸ் ஆக வேண்டும் என்று விரும்புகிறாராம். ரஜினி நடித்த பல படங்கள் ரீ ரிலீஸ் ஆகியுள்ளன. அந்த படங்களுக்கு இப்படி ரஜினிகாந்த் பேட்டி கொடுத்தது இல்லை. பில்டப் கொடுத்தது இல்லை. தனது சொந்த படம் என்பதால் படையப்பாவுக்கு அவர் வாய்ஸ் கொடுக்கிறார். ரீ ரிலீசில் இந்த படத்தை பெரிய அளவில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று விரும்புகிறார். ரஜினிகாந்த் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது இல்லை. படையப்பாவுக்காக அதை கூட செய்யலாம் என்கிறார்கள்.