இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் |
மறைந்த நடிகை ஸ்ரீதேவி தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தி சினிமாவிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். அவர் 1988ம் ஆண்டில் சென்னை ஈசிஆர் சாலையில் சில சொத்துக்களை வாங்கி இருக்கிறார். அதில், பீச் ஹவுஸ் மற்றும் நீச்சல் குளம் இடம்பெற்றுள்ளது. இந்த சொத்துக்களை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் பராமரித்து வருகிறார். ஆனால் இந்த நேரத்தில் மூன்று நபர்கள் போலியான வாரிசு சான்றிதழ் தயார் செய்து அந்த சொத்துக்கு உரிமை கோரி வந்துள்ளார்கள்.
இந்த நிலையில் அதற்கு எதிராக சென்னை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார் போனி கபூர். அதில், போலியான சான்றிதழ்களை பயன்படுத்தி தனது சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பதாகவும், அந்த போலி சான்றிதழ்களை ரத்து செய்ய கோரியும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட நிலம் குறித்து தாம்பரம் தாசில்தார் நான்கு வாரங்களில் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.