ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் |

கோவாவில் நடந்து வரும் 56வது சர்வதேச திரைப்பட விழாவில் 'ஆக்காட்டி' என்ற தமிழ் படம் 'சிறந்த அடையாளத் திரைப்படம்' என்ற பிரிவில் விருது பெற்றுள்ளது. படத்தின் இயக்குனர் ஜெய் லட்சுமி, இணைத் தயாரிப்பாளர் சுனில் குமார், ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத், மற்றும் காஸ்டிங் இயக்குனர் சுகுமார் சண்முகம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு விருதை பெற்றனர்.
தென் தமிழக கிராமப்புறங்களில் நிலவும் தாய்மாமன் சீர்வரிசை முறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், சமூதாய மரபுகள் உருவாக்கும் நெருக்கடிகளையும், அதனால் மனித மனத்தில் எழும் சிக்கல்களையும் மென்மையான உணர்வுகளையும் பதிவு செய்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் நடிப்பின் மூலம் கவனம் பெற்ற ஆண்டனி மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் முல்லையரசி, இவர்களின் மகனாக சுபாஷ் நடித்துள்ளனர். எஸ்.இ.எசக்கி ராஜா ஒளிப்பதிவு தீபன் சக்ரவர்த்தி இசை அமைத்துள்ளார் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.




