ககொ ககொ - கா கா, விரைவில் ரீ ரிலீஸ் | 'தொடரும்' வரவேற்பு : மோகன்லால் அன்புப் பதிவு | நானிக்காக அனிருத் பாடிய தானு பாடல் வெளியீடு | பீனிக்ஸ் வீழான் ஜூலை நான்காம் தேதி ரிலீஸ் | கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | விஜய் சேதுபதியுடன் மோதும் பஹத் பாசில் | சூர்யா 46வது படத்தின் படப்பிடிப்பு எப்போது | இட்லி கடை படத்தின் அப்டேட் தந்த அருண் விஜய் | மதகஜராஜா ; சுந்தர் சி சொன்ன வார்த்தை பலித்துவிட்டது : சந்தானம் | ஏப்., 30ல் கிஸ் முதல் பாடல் வெளியீடு |
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான், 'கோப்ரா' படம் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அஜய் ஞானமுத்து இயக்கும் இப்படத்தில் விக்ரம், மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடந்து வருகிறது. அதில் இர்பான் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
கடந்த வருடம் கொரோனா தாக்கம் ஏற்படுவதற்கு முன்பாக படக்குழுவினர் ரஷ்யாவில் தான் படப்பிடிப்பில் இருந்தனர். பின்னர் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு இந்தியா திரும்பினர். அங்கு எடுக்கப்பட வேண்டிய காட்சிகளுக்காக தற்போது மீண்டும் அங்கு சென்றுள்ளனர். இதுதான் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு எனத் தெரிவிக்கிறார்கள். அத்துடன் படப்பிடிப்பை முடித்து இறுதிக் கட்டப் பணிகளை விறுவிறுப்பாக செய்து முடிக்க உள்ளார்களாம்.
விரைவில் படத்தின் இசை வெளியீடு, பட வெளியீடு பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.