பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் |

நடிகர் விக்ரம் நடித்து கடைசியாக திரைக்கு வந்த படம் 'தங்கலான்'. இந்த படம் வெளியாகுவதற்கு முன்பே விக்ரம் 63வது படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார் என அறிவிப்பு வெளியானது.
கடந்த சில மாதங்களாக இந்த படத்திலிருந்து ஒரு சில காரணங்களால் மடோன் அஸ்வின் வெளியேறினார் என தகவல் வெளியானது. இன்னும் இந்த படத்திற்கான இயக்குனர் யார் என்பது அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் இந்த படத்தை ஒரு குறும்படத்தை இயக்கி பெயர் பெற்ற அறிமுக இயக்குனர் ஒருவர் தான் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கின்றார். மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற நாட்களில் வெளியாகும் என்கிறார்கள்.