Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இயக்குனர் மீது 'கும்பமேளா' புகழ் மோனலிசா பாலியல் புகார்

25 மார், 2026 - 12:22 IST
எழுத்தின் அளவு:
Kumbh-Mela-fame-Monalisa-files-sexual-harassment-complaint-against-director
Advertisement

கடந்த ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளா மூலம் புகழ்பெற்றவர் மோனலிசா. இதில் பாசி மணி ஊசி விற்ற மோனலிசாவின் கண்களும், அழகும் இணையத்தில் வைரலானது. இந்த திடீர் புகழால் இதன் பிறகு ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்தார். அதை தொடர்ந்து சினிமா வாய்ப்பும் வந்தது. தற்போது அவர் 2 படங்களில் நடித்து வருகிறாராம். கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் பர்மான் கான் என்பவரை இவர் திருமணம் செய்தார். தற்போது இவர் கொச்சியில் கணவருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் மோனலிசா தனது முதல் பட இயக்குனர் சனோஜ் மிஸ்ரா மீது பரபரப்பு பாலியல் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது : டைரக்டர் சனோஜ் மிஸ்ரா படப்பிடிப்பு தளத்தில் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். எனக்கு 18 வயது ஆவதற்கு முன் இந்த சம்பவம் நடந்தது. இதுகுறித்து அப்போது என்னுடைய குடும்பத்தினரிடம் கூறினேன். ஆனால் முதல் படம்தானே என்று கூறி அந்த விஷயத்தை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனாலும் அந்த சம்பவங்கள் என் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் டைரக்டர் சனோஜ் மிஸ்ரா மீது போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்திருக்கிறேன். இதற்காக சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறேன் என்று கூறியுள்ளார் மோனலிசா.

இதற்கிடைசில் மோனலிசா சில மலையாள படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு - நடிகர் சஞ்சய் தத் சந்திப்புஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு - ... மகளை முத்தமிட்டது தவறா?: பாலிவுட் நடிகர் வேதனை மகளை முத்தமிட்டது தவறா?: பாலிவுட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap