'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

அஜித்தின் 'குட் பேட் அக்லி', பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டியூட்' படங்களுக்குபின், பிரபல தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் சூரி நடிக்கிறார். இந்த படத்தை 'இன்று நேற்று நாளை, அயலான்' படங்களை இயக்கிய ஆர்.ரவிகுமார் இயக்குகிறார்.
இப்போது 'மண்டாடி' படத்தில் கதைநாயகனாக நடித்து வரும் சூரி, அடுத்து இந்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் கதைக்களம் 2015ல் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் பின்னணியில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. மைத்ரி நிறுவனம் தயாரிக்கும் படம் என்பதால் இதுவரை இல்லாத அளவுக்கு பெருந்தொகையை சம்பளமாக சூரி பெறுகிறார் என்று கூறப்படுகிறது. ஆர்.ரவிகுமார் இயக்கிய 'இன்று நேற்று நாளை' ஹிட்டானது. ஆனால், சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' பெரிய வெற்றி பெறவில்லை. அதனால், பெரும் போராட்டத்துக்குபின் இந்த படத்தில் அவர் கமிட்டாகி இருக்கிறார்.