நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

பாலிவுட்டின் சீனியர் நடிகையும், நடிகர் அமிதாப்பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சனுக்கு சமீபத்தில் நடைபெற்ற பிலிம்பேர் விருது விழாவில் பாலிவுட்டின் மிகப்பெருமை வாய்ந்த சினி ஐகான் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ஷாரூக்கான் மற்றும் இயக்குனர் கரண் ஜோகர் இணைந்து ஜெயா பச்சனிடம் வழங்கினார்கள். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், தயவு செய்து நமது திரையுலகத்தை பாலிவுட் என்று அழைக்காதீர்கள் என்று கொஞ்சம் காட்டமாகவே பேசியுள்ளார்.
“நட்சத்திரங்கள், எழுத்தாளர்கள், இயக்குனர்கள், ஏன் பார்வையாளர்கள் கூட பாலிவுட் என்றே குறிப்பிடுகிறார்கள். இது பாலிவுட்டும் அல்ல, ஹாலிவுட்டும் அல்ல. தயவுசெய்து அப்படி குறிப்பிட வேண்டாம். இது ஹிந்தி - இந்தியன் திரை உலகம். அதற்கான மரியாதையை கொடுங்கள். திரையுலகில் 55 வருடங்களாக இருப்பவள் என்கிற முறையில் இந்த கோரிக்கையை நான் வைக்கிறேன்” என்று கேட்டுக்கொண்டார்.