ஜான்வி கபூர் : கிளாமர் வாய்ப்புகளை மட்டுமே தரும் தெலுங்கு சினிமா | மக்கள் மேடை : தனி இயக்கம் துவக்கினார் ரஜினி மனைவி லதா | 60 வயதில் மூன்றாவது திருமணம் : அமீர்கானை விமர்சிக்கும் ரசிகர்கள் | காஜல் அகர்வால் நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ம் தேதி வெளியாகிறது! | மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் நாகசைதன்யா | ஜனநாயகன் : வினியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பித் தரப்படுகிறதா? | கருப்பு - தமிழக வசூல் 175 கோடி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பெத்தி : முதல் நாள் வசூல் ரூ.135 கோடி | 8 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பி வரும் ஆஸ்னா ஜவேரி | மறுபிரவேசம் தொடங்கி விட்டது : ஈடன் மகிழ்ச்சி |

தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், மாரி 1 மற்றும் மாரி 2 போன்ற படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். தற்போது தமிழில் 'லவ்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இது நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. இவரின் அடுத்த படம் என்ன என்று தமிழில் ரசிகர்கள் பலரும் ஆர்வமாக காத்திருந்தனர்.
இந்த நிலையில் பாலாஜி மோகன் அடுத்த படத்தை ஹிந்தியில் இயக்குகிறார். இதன் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகிறார். இயக்குனர் ஆனந்த் எல் ராயின் கலர் எல்லோ புரொடக்சன்ஸ் மற்றும் அமேசான் எம்ஜிஎம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ' நையி நாவீலி' என தலைப்பு வைத்துள்ளதாக அமேசான் ஓடிடி நடத்திய நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதில் முதன்மை கதாபாத்திரத்தில் யாமி கவுதம் நடிக்கிறார். இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.




