மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்தை இயக்கினார். மாபெரும் வெற்றி பெற்ற அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவர் பிரபாஸ் நடிப்பில் ஸ்பிரிட் என்கிற படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பிரபாஸ் பிறந்தநாளில் இப்பட அறிவிப்பு வீடியோ வந்தது. அதில் திரிப்தி டிமிரி, விவேக் ஓபராய், காஞ்சனா உள்ளிட்டோர் நடிப்பது அறிவிக்கப்பட்டது.
சமீபத்தில் நடிகர் பிரபாஸின் பிறந்தநாளன்று பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். விவேக் ஓபராயும் பிரபாஸுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக சந்தீப் ரெட்டி வங்கா பிரபாஸுக்கு தெரிவித்திருந்த வாழ்த்தில் இப்படி ஒரு சவுண்ட் ஸ்டோரியை நீங்கள் வெளிப்படுத்துவதற்காக மிகவும் நன்றி அண்ணா என்று குறிப்பிட்டிருந்தார்.
நடிகர் விவேக் ஓபராய் இந்த பதிவை மேற்கோள் காட்டி, “என்ன ஒரு பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரியாக அது இருந்தது” என்று குறிப்பிட்டு உள்ளார்.