டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

'மெஹந்தி சர்க்கஸ்' என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் கோவையைச் சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ். சமையல் சார்ந்த ரியாலிட்டி ஷோ மூலம் இன்னும் பிரபலமானார். அதன் பிறகு படங்களில் நடிப்பதை விட கேட்டரிங் தொழிலில் பிசியான மாதம்பட்டி ரங்கராஜ், பல பிரபலங்கள் வீட்டு நிகழ்வுகளுக்கும் கேட்டரிங் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். ஏற்கனவே அவருக்கு ஸ்ருதி என்கிற மனைவி இருந்த நிலையில் அவர் ஆடை அலங்கார நிபுணரான ஜாய் கிரிசில்டா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக சோசியல் மீடியாவில் தகவலும் புகைப்படங்களும் வெளியாகின.
இந்த புகைப்படங்களை வெளியிட்டு இதை அறிவித்த ஜாய் கிரிசில்டா சில மாதங்கள் கழித்து மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து மோசடி செய்து விட்டதாகவும் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறி போலீஸ் நிலையத்திலும் மகளிர் ஆணையத்திலும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்தார். இது தொடர்பான விசாரணை மகளிர் ஆணையத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தான் நிறை மாத கர்பிணியாக இருப்பதால் ஆடை வடிவமைப்பில் ஈடுபட முடியவில்லை என்பதாலும், தனக்கும் தன் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் மருத்துவ செலவு, வீட்டு வாடகை, மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் 6,50,000 ரூபாய் பராமரிப்பு செலவு தொகையை ரங்கராஜ் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.