இத்தனை வயதிலும் பிகினியில் அசத்தும் ஸ்ரேயா | நான் உயிர் உள்ள மனுஷி - சாய் பல்லவி | மீண்டும் புத்துயிர் பெறும் 'சங்கமித்ரா' | சினிமாவில் வெற்றி தான் முக்கியம் : மணிகண்டன் | நீக் படத்திற்கு எஸ்.ஜே.சூர்யா விமர்சனம் : தனுஷ் நன்றி | முதல் 3 நாட்களில் 12 கோடி வசூலித்த கங்கனாவின் 'எமர்ஜென்சி' | 2025ல் ராஷ்மிகாவின் முதல் படம் பிப்ரவரி 14ல் வெளியாகிறது! | பிரேமலு 2ம் பாகம் அப்டேட் | காதலியை மணந்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து | கவுதம் மேனன் இயக்கத்தில் ரவி மோகன் |
மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படம் பான் இந்தியா படமாக தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகி உள்ளது.
ஹிந்தியில் 'விக்ரம் வேதா' படமும், கன்னடத்தில் 'கண்டாரா' படமும் இப்படத்திற்குப் போட்டியாக உள்ளன. அதே சமயம் 'விக்ரம் வேதா' படத்திற்கு 'பொன்னியின் செல்வன்' படத்தின் கதாநாயகர்களான கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கார்த்தி நேற்றும், ஜெயம் ரவி இன்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கு 'விக்ரம் வேதா' படத்தின் இயக்குனர்களாக புஷ்கர், காயத்ரி நன்றி தெரிவித்து, “பொன்னியின் செல்வன்' படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் சினிமா உலகத்தைச் சேர்ந்த புஷ்கர் காயத்ரி தமிழில் இயக்கிய 'விக்ரம் வேதா' படத்தை அதே பெயரில் தெலுங்கிலும் இயக்கியுள்ளார்கள். இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தாலும் இன்னும் வசூல் ரீதியாக பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.