மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடித்து தியேட்டர்களில் வெளிவந்து 1000 கோடி மேல் வசூலித்த திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் ஓடிடியில் வெளிவந்த பின்பு உலகம் முழுவதும் இன்னும் அதிகமான ரசிகர்களைச் சென்று சேர்ந்தது. ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் படத்தைப் பார்த்து வியந்து பாராட்டி உள்ளனர்.
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானதிலிருந்தே 'ஆர்ஆர்ஆர்' படத்தைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வந்துள்ளது. ஓடிடியில் வெளியாகி கடந்த 14 வாரங்களில் தொடர்ச்சியாக உலக அளவில் டிரெண்டிங்கில் இருந்துள்ள ஒரே திரைப்படம் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஆங்கிலம் மற்றும் ஆங்கிலம் அல்லாத மொழிப் படங்களில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களில் ஹாலிவுட் படங்கள்தான் அதிக சாதனை படைப்பது வழக்கம். முதல் முறையாக ஒரு இந்தியத் திரைப்படம் இப்படி ஒரு சாதனையைப் புரிந்திருப்பது இந்தியத் திரையுலகத்திற்குப் பெருமையான ஒரு விஷயம்.