மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

தேர்வு மாதமாக இருந்தால் என்ன கிடைக்கும் தேதிகளில் தானே படங்களை வெளியிட முடியும் என இந்த மாதத்திலும் வாரா வாரம் படங்கள் வெளியாகும் அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.
மார்ச் முதல் வாரமான கடந்த வாரம் மார்ச் 6ம் தேதியில் 9 படங்கள் தியேட்டர்களில் வெளியாகின. இந்த வருடத்தில் இதுவரையில் படங்கள் வெளியான வாரங்களில் கடந்த வாரம்தான் அதிக எண்ணிக்கையிலான படங்கள் வெளியாகி உள்ளன. அவற்றுடன் சேர்த்து இந்த வருடத்தில் இதுவரையில் வெளியான படங்களின் எண்ணிக்கை 50ஐக் கடந்து, மொத்த படங்களின் எண்ணிக்கை 54ஐத் தொட்டுள்ளது.
இந்த வாரம் மார்ச் 13ம் தேதி, “கெணத்த காணோம், கொலைச் சேவல், போலீஸ் பேமிலி, வெஞ்சென்ஸ், வவ்வல்ஸ்” ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. மார்ச் 12ம் தேதி 'மேட் இன் கொரியா' படம் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது.
கடந்த வாரம் வெளியான படங்களுக்கு சரியான வரவேற்பு இல்லாத நிலையில், வழக்கம் போல இந்த வாரமும் புதிய படங்கள் வெளியாகின்றன. இவையும் சிறிய பட்ஜெட் படங்கள்தான். ஏற்கெனவே 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நடந்து வரும் நிலையில் மார்ச் 11 முதல் 10ம் வகுப்புகளுக்கான தேர்வுகளும் ஆரம்பமாக உள்ளன. இதற்கடுத்து மற்ற வகுப்புகளுக்குமான தேர்வுகளும் ஆரம்பமாக உள்ளதால் தியேட்டர்கள் பக்கம் மக்கள் வருகை மிக மிகக் குறைவாகவே இருக்கும்.