‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் | அடுத்து கொரோனா வந்தால் சென்னை காலி ; பொள்ளாச்சியில் செட்டில் ஆக ஆசை: விஜய் ஆண்டனி | சாய் பல்லவிக்கு எழுதப்பட்ட கதையில் நடித்த சமந்தா | ஆர்யா 40 : படப்பிடிப்பு நிறைவு | ஜூன் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | எவ்வளவு காலம் முடியுமா அவ்வளவு காலம் கார் ரேஸ் : அஜித் பேட்டி | 'கருப்பு' - இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் | ரூ.230 கோடி வசூலைக் கடந்த 'பெத்தி' |

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லெட்சுமி மற்றும் பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியான படம் 'பொன்னியின் செல்வன் 1'.
கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை இரண்டு பாகங்களாகத் திரைப்படமாக்கி முதல் பாகமாக 'பொன்னியின் செல்வன்' வெளியானது. தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி 500 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியது. நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஓடிடி தளத்தில் வெளியான பின்னும் தியேட்டர்களில் படம் ஓடி வருகிறது.
சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் சில தியேட்டர்களில் 75 நாட்களைக் கடந்தும் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் 2023 கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரையில் வெளியான 175க்கும் மேற்பட்ட படங்களில் ஒரு சில படங்கள்தான் 75 நாட்களைக் கடந்துள்ளன. அவற்றில் 'பொன்னியின் செல்வன்' படமும் ஒன்று.