விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது | என்னை வேவு பார்ப்பவர்களை வீடு புகுந்து அடிப்பேன் : கங்கனா ஆவேசம் | கடும் குளிரில் விஜய் படக்குழுவினர் அவதி: சென்னை திரும்பினார் த்ரிஷா | ஹீரோயின் ஆன யு-டியூப் பிரபலம் | 'லியோ' படத்திற்கு இப்போதே முன்பதிவு ஆரம்பம் | ‛ரைட்டர் பத்மபூஷன்' படம் பாருங்கள் ; சிபாரிசு செய்யும் மகேஷ்பாபு | பதான் இயக்குனருடன் சேர்ந்து பிரபாஸ் - ஹிருத்திக் படத்தை புதுப்பிக்கும் புஷ்பா தயாரிப்பாளர்கள் |
மணிரத்னம் இயக்கத்தில் செப்டம்பர் 30ம் தேதி வெளிவந்த சரித்திரப் படமான 'பொன்னியின் செல்வன்' படம் பத்து நாட்களைக் கடந்தும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் 150 கோடி வசூலைக் கடந்துள்ள இந்தப் படம் தற்போது வெளிநாடுகளிலும் 150 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த '2.0' படம் மட்டும்தான் 150 கோடி வசூலைக் கடந்த படமாக இருக்கிறது. அந்தப் படம் வெளிநாடுகளில் மொத்தமாக 170 கோடி வரை வசூலித்துள்ளது. அந்த சாதனையை 'பொன்னியின் செல்வன்' முறியடிக்குமா என்பது அடுத்த கேள்வியாக எழுந்துள்ளது.
ஏற்கெனவே “அமெரிக்கா, ஆஸ்திரேலியா, யுனைட்டட் கிங்டம், சிங்கப்பூர் மலேசியா” ஆகிய இடங்களில் அதிக வசூலைக் குவித்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையை 'பொன்னியின் செல்வன்' நிகழ்த்தியுள்ளது.
வெளிநாடுகளில் தமிழ்ப் படங்களுக்கு அதிக வசூலை பெற்றுத் தரும் அமெரிக்காவில் பொதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்தான் தமிழ்ப் படங்களுக்கான காட்சிகளும், அதற்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகமாக இருக்கும். ஏற்கெனவே, படம் வெளியான வார சனி மற்றும் ஞாயிறு, கடந்த வார சனி மற்றும் ஞாயிறு என இரண்டு வார நாட்களில் 'பொன்னியின் செல்வன்' படம் அதிக வசூலைப் பெற்றுள்ளது. வரும் வார இறுதி நாட்களிலும் இந்தப் படத்திற்கு சிறப்பான வசூல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற வெளிநாடுகளில் தினசரி வசூல் இன்னமும் நன்றாக இருப்பதாகத் தகவல் வந்துள்ளது. எனவே, '2.0' படத்தின் வெளிநாட்டு வசூலை 'பொன்னியின் செல்வன்' முறிடியக்கும் என்றே சொல்கிறார்கள்.