Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்னியின் செல்வன் 2வது பாகம் எப்படி இருக்கும்? - மணிரத்தனம் தகவல்

21 அக், 2022 - 12:41 IST
எழுத்தின் அளவு:
Maniratnam-about-Ponniyin-selvan-journey-and-Ponniyinselvan-2

கல்கியின் பொன்னியின் செல்வனை மணிரத்னம் இயக்கி இருந்தார். இதன் முதல் பாகம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த பாகம் 7 முதல் 8 மாத்திற்கு பிறகு வெளிவரும் என்று மணிரத்னம் தெரிவித்துள்ளார். 2ம் பாகம் எப்படி இருக்கும் என்பது குறித்து மணிரத்னம் கூறியிருப்பதாவது:

நான் முதன் முதலாக படித்த பெரிய நாவல் கல்கியின் பொன்னியின் செல்வன் தான். சென்னையில் உள்ள லாயிட்ஸ் சாலையில் ஈஸ்வரி லெண்டிங் நூலகம் உள்ளது. அங்கு தான் பொன்னியின் செல்வனின் 5 பாகங்களையும் மணியம் ஓவியங்களுடன் படித்தேன். முழு கதையையும் ஒரே நீட்டிப்பில் படித்து முடித்தேன். படிக்கும்போது புன்னகையுடன் படித்தேன்.

சோழர்களுடைய நிலப்பரப்புகள், குதிரைகள், கதாபாத்திரங்கள், பழுவேட்டரையரின் இரட்டை மீசை, இவை யாவும் என் மனதைவிட்டு போகவே இல்லை. அவர் எழுதிய விதம், படிப்பவர்களை தன்வசம் ஈர்த்துக் கொள்வார். எழுத்தால் நம்மிடம் தொடர்ந்து பேசுவார். பாதியிலேயே விட்டு வந்த வந்தியதேவன் என்ன செய்கிறார் என்று ஆர்வமாக பார்ப்போம். கூடவே அவருடன் பயணித்த உணர்வு வரும். மணியம் ஓவியம் இல்லாமல் கல்கியைப் படித்திருக்க முடியாது. மணியம் தான் அடித்தளமாக இருந்தார்.



ஆழ்வார்க்கடியான் நம்பி என்பவர் குடுமியோடு மதில் மேல் வெறும் தலை மட்டும் வைத்துக் கொண்டு இருப்பவர். நந்தினி என்றால் ஒரு ஆண்டாள் கொண்டை தேவைப்படுகிறது என்பதை அவரே சுலபமாக வரையறுத்துக் கொடுத்துவிட்டார். ஆனால், அவர் அதை சாதாரணமாக வரையவில்லை, அவரும் அந்த காலத்தில் எப்படி இருந்தார்கள் என்று ஆராய்ச்சி செய்து விளக்கத்துடன் தான் வரைந்து கொடுத்திருக்கிறார். ஆகையால், நான் அந்த அடித்தளத்தை மீறி போகவில்லை.

ஆனால், அந்த கதையில் இருந்து வரும் இது இன்னொரு கிளை. பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புனைகதை. ஆனால், கதாபாத்திரங்களையும், அவர்களுக்கு நடந்த சம்பவங்களையும் வரலாற்றை உண்மையாக எழுதியிருக்கிறார். இதைத் தாண்டி நந்தினி கதாபாத்திரம் மட்டுமே முழுக்க முழுக்க புனையப்பட்டது. மேலும், பல புனையபட்ட கதாபாத்திரங்களை கதைக்குள் கொண்டு வந்து இருக்கிறார்.

இந்த கதை 5 பாகங்களைக் கொண்டது. அதை 2 பாகங்களாக 2 படங்களிலேயே கொண்டு வருவதற்கு சில தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தது. சில காட்சிகளை நீக்கியது தெரியக்கூடாது, கதையின் ஓட்டம் ஒரே சீராக இருக்க வேண்டும், அதற்காக ஒரு பாலம் கட்ட வேண்டியிருந்தது.



கதையாக எழுதும்போது ஒவ்வொரு கதாபாத்திரமும் எப்படி என்று 3 அல்லது 4 பக்கங்களில் சொல்லி விடலாம். உதாரணத்திற்கு, வந்தியத்தேவன் நந்தினியை பார்க்கும்போது என்ன நினைத்தார்? குந்தவையை பார்க்கும் போது என்ன நினைத்தார்? என்பதை சுலபமாக சொல்லிவிடலாம். ஆனால், சினிமாவாக எடுக்கும் போது அந்த அனுகூலம் இருக்காது.

சுந்தர சோழரை முதல் முறை பார்க்கும் போதே, முதலில் அவர் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார் என்று புரிய வேண்டும். இரண்டாவது பேரரசரின் எண்ணங்கள், இவை யாவும் முதல் காட்சியிலேயே வெளிவர வேண்டும். அதனால் அதற்குத் தேவைப்படுபவற்றைக் கொண்டுவருவது அவசியம்.

அதே மாதிரி, குந்தவை புத்திசாலி, சோழ சாம்ராஜ்யத்தின் தூண், அரசியல் தெரிந்தவர். மேலும், அருண்மொழி வர்மன் வருவதற்கு அவர்தான் முக்கிய காரணம். இப்படி அந்த புத்தகத்தில் நிறைய இடத்தில் நிறைய கதாபாத்திரங்கள் குந்தவையை பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். கேட்பதை விட பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பல மாற்றங்களை கொண்டு வந்தோம்.

மேலும், கல்கியின் எழுத்து அலங்கார தமிழ் இல்லை. அதை மேடையில் நடிப்பதும் கஷ்டம். மேடையின் தரம் சுலபமாக வந்துவிடும். இதில் முதல் விஷயம், இந்த தலைமுறையினருக்கு சுலபமாக புரிய வேண்டும், இரண்டாவது சோழர் காலத்தை குறிக்க வேண்டும். இதை ஜெயமோகன் மிக எளிமையாக செய்தார். பாரம்பரிய தமிழ்தான் ஆனால், குறுகிய வாக்கியங்களாக எழுதினார். அது உணர்ச்சியுடன் நடிப்பதற்கும், படப்பிடிப்பு நடத்துவதற்கும் மிகப் பெரிய அனுகூலமாக இருந்தது.



தமிழ்நாட்டிலேயே பொன்னியின் செல்வன் மீது ஈர்ப்பும், மிகப்பெரிய கொண்டாட்டமும் இருக்கிறது. இது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் இதை படமாக எடுக்க வேண்டும் என்ற கனவு இருந்திருக்கலாம்.

மேலும், முதல் பாகம் பார்க்காதவர்களுக்கும் இரண்டாவது பாகம் புரிய வேண்டும், இந்த இரண்டு பாகமும் தனியாகவும் இருக்க வேண்டும், சேர்ந்து இருந்தால் இன்னமும் நன்றாக இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் தான் எடுத்தோம்.

இந்த புத்தகத்தைப் படித்தவர்கள் நிறைய பேர் இதை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டார்கள், அதேபோல்தான் இந்த புத்தகத்தில் எனக்கும் நிறைய பிடித்து இருந்தது. அதை நான் படமாக்கி கொண்டேன். என்கிறார் மணிரத்னம்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ஜேம்ஸ் பாண்டுக்கு இங்கிலாந்து அரச குடும்பம் மரியாதைஜேம்ஸ் பாண்டுக்கு இங்கிலாந்து அரச ... வானதி அணிந்த 5 லட்ச ரூபாய் புடவை வானதி அணிந்த 5 லட்ச ரூபாய் புடவை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

krishnamurthy - chennai,இந்தியா
27 அக், 2022 - 20:53 Report Abuse
krishnamurthy மிகச்சிறந்த படைப்பு
Rate this:
Jothi babu - Cuddalore ,இந்தியா
22 அக், 2022 - 23:04 Report Abuse
Jothi babu மிகச் சிறந்த படைப்பு. ஆனால் கதாபாத்திரங்கள் இன்னும் தெளிவாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கலாம். நாவல் படிக்காதவர்களுக்கு புரிவது கடினம். Slow motion scenes கதாபாத்திரங்களை மேலும் மெருகேற்றும். மற்றபடி சிறப்பு
Rate this:
Veeramani Shankar - Hyderabad,இந்தியா
21 அக், 2022 - 14:08 Report Abuse
Veeramani Shankar நீங்கள் அனைத்து தலைமுறையினரை நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் தியேட்டருக்கு வரவழைத்ததற்க்கு வாழ்த்துக்கள்.
Rate this:
SANKAR - ,
21 அக், 2022 - 18:21Report Abuse
SANKARthankyou for praise..Mani is accused for deviating from novel and showing events that are not in novel.How many know kalki himself d it as fiction based on some core idea.He clearly stated Nandini did not exist.But Aru RAMANATHAN wrote an expansion of PS with the title " veerapandian manaivi" it is equally good but known only to few...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in